/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/150_5.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் தினத்தையொட்டி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனவரி 29-ஆம் தேதி ‘மாஸ்டர்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.
கரோனா நெருக்கடி காரணமாக பல நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால், படத்தை வெகு விரைவிலேயே ஓடிடி தளத்தில் வெளியிடும் முடிவை, தயாரிப்புத் தரப்பு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமேசான் ப்ரைம், முதற்கட்டமாக படத்தின் ட்ரைலரை தனது தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து உற்சாகமான விஜய் ரசிகர்கள், இத்தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)