Advertisment

ரிலீஸ் தேதியை அறிவித்த மாஸ்டர் படக்குழு! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

master

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கைதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணைந்துள்ளது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்துவிட்டாலும், கரோனா நெருக்கடி காரணமாகத் திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், தியேட்டர்கள் திறப்பதற்கு அரசு அனுமதியளித்ததையடுத்து, படத்தைத் திரைக்குக் கொண்டு வரும் பணிகளில்படக்குழு முனைப்பு காட்டி வருகிறது.

Advertisment

இந்த நிலையில், படம் ரிலீஸ் தேதி தொடர்பான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, மாஸ்டர் திரைப்படமானது பொங்கல் தினத்தையொட்டி வரும் ஜனவரி மாதம் 13-ம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இத்தகவலை அறிந்து உற்சாகமான விஜய் ரசிகர்கள், தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisment

master
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe