லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுவதும் கடந்த மாதமே முடிக்கப்பட்டு ரிலீஸுக்கான இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இந்நிலையில், கரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், அனைத்து வேலைகளும் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டது.கரோனா அச்சுறுத்தலால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சினிமா துறை வேலைகள் நேற்று முதல் சில நிபந்தனைகளுடன் தொடங்க தமிழக அரசு அனுமதியளித்தது. இதைத்தொடர்ந்து திரைப்படத் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளான படத்தொகுப்பு, குரல் பதிவு, விஷூவல் கிராபிக்ஸ் போன்ற பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் 'மாஸ்டர்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இதனால் இப்படம் விரைவில் வெளியாக மீண்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 'மாஸ்டர்' படம் முதலில் திரையரங்கில் தான் வெளியாகும் எனச் சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.