master movie fame is act in Ajith Thunivu movie and also actress pavni

அஜித், தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் உள்ளிட்ட சில நகரங்களில் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் 'துணிவு' படத்தில் பிக்பாஸ் பிரபலம் நடிகை பாவ்னி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாங்காக்கில் நடந்து வரும் படப்பிடிப்பில் பாவ்னியும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனை உறுதிசெய்யும் வகையில் பாவ்னி தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தில் அஜித்துடன் பாவ்னி மற்றும் அவரது காதலர் அமீர் இருக்கிறார். மேலும் விஜய்யின் 'மாஸ்டர்' பட பிரபலம் சிபி சந்திரனும் 'துணிவு' படத்தில் நடிப்பதாக கூப்படுகிறது. அவரும் தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்நதுள்ளர். இப்போது இப்புகைப்படம் சமூக வலைத்தளத்தில்வைரலாகி வருகிறது.

Advertisment