பிகில் படத்திற்கு பின் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். வருகிற ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி இப்படம் ரிலீஸாகலாம் என்று சொல்லப்படுகிறது.

Advertisment

lokesh kanagaraj

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த படத்தில் முதன் முதலாக விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஷாந்தனு, அர்ஜூன் தாஸ், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். நேற்று இப்படத்தில் இருக்கும் ஒருசில பேட்ச் ஒர்க்கள் ஷூட் செய்யப்பட்டு, இப்படத்தின் முழு ஷூட்டிங் முடிவடைந்துவிட்டதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இதுதொடர்பாக ட்விட்டரில் ட்வீட் செய்துள்ள லோகேஷ், “129 நாட்கள் இடைவெளியற்ற படப்பிடிப்பு! மாஸ்டர்... இது புன்னகைக்கும் கண்களுடன் புன்னகை தவழும் முகம்! இந்தப் பயணம் என் இருதயத்துக்கு நெருக்கமானது.

Advertisment

என்னையும் என் குழுவையும் நம்பியதற்காக விஜய் அண்ணாவுக்கு நன்றி. என்னுடைய இந்த இயக்கக் குழு இல்லாமல் இந்த இமாலயப் பணியை எளிதில் முடித்திருக்க முடியாது. உங்களை நினைத்துப் பெருமையடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகளில் மும்மூரமாக இறங்கியுள்ளது படக்குழு. இதனிடையே விளம்பர பணிகளிலும் கவனம் செலுத்தி வருவதால் ஏப்ரல் படம் ரிலீஸாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.