window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1584956668553-0'); });
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1584957472633-0'); });
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுவதும் கடந்த மாதமே முடிக்கப்பட்டு ரிலீஸுக்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கரோனா பீதி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மாஸ்டர் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்கு விஜய் ஒப்புக்கொண்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கிடையே ஊரடங்கை பயன்படுத்தி பல்வேறு டிஜிட்டல் நிறுவனங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள படங்களை கைப்பற்றி வருகின்ற நிலையில் 'மாஸ்டர்' படமும் டிஜிட்டலில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் 'மாஸ்டர்' படம் முதலில் திரையரங்குகளில்தான் வெளியாகவுள்ளது. அதற்குப் பிறகுதான் டிஜிட்டலில் வெளியாகும் என புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.