/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Actor-Yogi-Babu-Dharma-Prabhu-Movie-First-Look-Poster-HD.jpg)
யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் 'தர்ம பிரபு'. பி.ரங்கநாதன் தயாரிப்பில் இயக்குனர் முத்துக்குமரன் இயக்கும் இப்படம் எமலோகத்தைப் பற்றிய நகைச்சுவை கலந்த படமாக உருவாகிவருகிறது. இந்நிலையில்தற்போது இப்படத்திற்காக 'AVM' ஸ்டூடியோவில் ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு தளம் போடப்பட்டுள்ளது. சுமார் 1 ½ லட்சம் வருடங்கள் பழமையான எமலோகம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சொர்க்கம் மற்றும் நரகம் என்று தனித்தனியாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்படவுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேலும், இந்த தளம் அமைப்பதற்கு கலை இயக்குநர் பாலசந்தர் தலைமையில் ஏறக்குறைய 200 பேர் கொண்ட குழு கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமால் உழைத்து வருகிறார்கள். வருகிற டிசம்பர் 14ம் தேதி இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், மகன் எமனாக யோகிபாபு நடிக்க, அவருக்கு அப்பா எமனாக ராதாரவி நடிக்கிறார். சித்ரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர்களுடன் அழகம் பெருமாள், 'போஸ்' வெங்கட், சோனியா போஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு நடனமாடுகிறார். அதற்காக பிரத்தியோகமாக பிரம்மாண்ட தளம் அமைக்கப்படுகிறது. மேலும், அவருக்கென்று பிரத்யேகமான உடைகளும், ஆபரணங்களும் தயாராகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)