Masoom Shankar to make debutant of South Indian cinema

Advertisment

ஆரி அர்ஜுனன் நடிப்பில் வெளியான 'நாகேஷ் திரையரங்கம்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை மாசூம் சங்கர்.. அப்படத்தைத் தொடர்ந்து '90 எம்எல்', 'தனுசு ராசி நேயர்களே', 'டெடி' மற்றும் 'பயணிகள் கவனிக்கவும்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் 'டி டி ரிட்டன்ஸ்' திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் பணியாற்றுவது குறித்து கேட்டபோது, ''நான் தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாக இருப்பதை மட்டும் நம்பவில்லை, என்னுள் ஒரு தமிழன் ஆன்மா இருக்கிறது என்று நான் உணர்கிறேன். அதனால் தான் நான் தமிழ் கற்றுக் கொள்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டேன். மேலும் எனது கதாபாத்திரங்களுக்கு பின்னணி பேசுவதிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன்‌. அதை நான் உறுதியாக நம்புகிறேன். மொழி தெரியாமல் நடிப்பது அநியாயம்'' என்றார் நடிகை மாசூம் சங்கர்.

இவர் நடிப்பைத்தாண்டி சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.தற்காப்பு கலைகளிலும் பயிற்சி பெற்றிருக்கிறார். தமிழைத்தாண்டி தெலுங்கிலும் அறிமுகமாகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.