ADVERTISEMENT

“அப்போ ஆசைப்பட்டேன் வாய்ப்பு கிடைக்கல, இப்போ வாய்ப்பு கிடைச்சிருக்கு நேரம் கிடைக்கல”- விஜய் சேதுபதி

11:21 AM Apr 05, 2019 | santhoshkumar

மார்வெல் நிறுவனத்தின் புகழ் பெற்ற அவெஞ்சர்ஸ் வரிசையில் அடுத்த பகுதியான 'அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம்' விரைவில் வெளிவர இருக்கிறது. விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் வரும் 'அயர்ன் மேன்' பாத்திரத்துக்கு தமிழ்க் குரல் கொடுத்துள்ளார். இப்படத்தின் ஹிந்தி மற்றும் தமிழ் டப்பிங் வடிவங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவெஞ்சர்ஸ் ஆன்தம் என்ற பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஆன்ட்ரியா, பாடலை எழுதிய விவேக் உள்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளித்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் தற்போது பல சூப்பர் ஹீரோக்கள் படம் எடுக்கப்படுகின்றன ஆனால், ஹாலிவுட் படங்களை போல கமர்ஷியல் வெற்றி இந்திய சூப்பர் ஹீரோ படங்கள் அடைவதில்லை அதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

அது இல்லை. இந்திய சினிமாவில் எடுக்கும் அனைத்து படங்களும் சூப்பர் ஹீரோ படங்கள்தான், உங்களுக்குதான் அது தெரியவில்லை. ஏங்க ஹீரோ ஒருவரை அடித்தால் அவர் மேலே பறக்கிறார் என்றால் அது என்ன? சூப்பர் ஹீரோதான். அங்கு பூச்சி கடித்து ஸ்பைடர் மேன் ஆகிவிட்டார், இது போட்டதால் சூப்பர் ஹீரோ ஆகிவிட்டார் என்று சொல்கிறார்கள். ஆனால், இங்கோ சாதாரணமாகவே சூப்பர் ஹீரோக்கள்தான் நம் நடிகர்கள். நம்ப எடுக்கிற சப்ஜெக்ட் அனைத்தும் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்தான். என்ன பொறுத்தவரை கெட்டதை அழிப்பவன் எல்லாம் சூப்பர் ஹீரோதான்.

உங்கள் பையனுக்கு மார்வெல் யுனிவெர்ஸில் எந்த சூப்பர் ஹீரோ பிடிக்கும்?

எனக்கு தெரிந்தவரைக்கும் அவனுக்கு அயர்ன் மேன் தான் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஏன் என்றால்? அவன் என்னை எப்போதும் மாஸா நடிப்பா என்றுதான் சொல்வான்.

தமிழில் முதன் முறையாக ஒரு மிகப்பெரிய ஹீரோ வேறு ஒரு படத்திற்காக டப்பிங் கொடுக்க முன் வந்திருக்கிறீர்கள். இது தொடருமா?

அது எனக்கு தெரியவில்லை. நான் டப்பிங் யூனியன் மெம்பர். நிறைய மோகன்லால் படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறேன். என் குழந்தைகளுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பே டப்பிங் கார்டு எடுத்துக் கொடுத்திருக்கிறேன். டப்பிங் ஒரு நல்ல எக்ஸ்பிரியன்ஸ் என்று நினைக்கிறேன். நான் முதன் முதலில் டப்பிங் கார்டு எடுத்தபோது கார்டூன் படங்களுக்குதான் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஏன் என்றால் கார்டூன் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் கொடுப்பதை அடித்துக்கொள்ளவே முடியாது. செமயாக இருக்கும் அது. எனக்கு கார்டூன் படங்களுக்கு டப்பிங் கொடுக்க வேண்டும் என்று மிகவும் ஆசை. நானாகவே நிறைய படங்களுக்கு சென்று முயற்சி செய்து பார்த்தேன் ஆனால் கிடைக்கவில்லை. சமீபத்தில் ஒரு ஆஃபர் வந்தது ஆனால் என்னால் பேச முடியவில்லை. டப்பிங் ஒரு நடிகனுக்கு மிகவும் தேவையான ஒன்றாக நினைக்கிறேன். இந்த படத்திற்காக ஒப்புக்கொள்ளும்போது நான் மிகவும் பயந்தேன். அயர்ன் மேன் டைமிங் வேறு, அதை எப்படி புரிந்துகொண்டு டப்பிங் செய்யப் போகிறேன் என தெரியாமல் இருந்தேன். எனக்கு டப்பிங் பேச மிகவும் கஷ்டமாக இருந்தது. என்னதான் இருந்தாலும் பயப்படுறதா? கற்றுக்கொள்வதா? என்றபோது நான் கற்றுக்கொள்ளலாம் என முடிவு செய்தேன். இப்படி டப்பிங் பேசவும் நல்ல காசு தருகிறார்கள். காசும் தந்து கற்றூக்கொடுக்கிறார்கள் என்பதால் சம்மதித்தேன்.

உங்களுக்கு கொடுத்த வசனத்தை அப்படியே பேசியிருக்கிறீர்களா? அல்லது உங்களுடைய இன்புட்ஸ் எதும் படத்தில் உள்ளதா?

அது எல்லா படத்துலேயும் இருக்கும். அவர் ‘குட்’ என்று சொல்லியிருந்தால் நான் சிறப்பு என்று சொல்லியிருக்கிறேன். சிறப்பு, நல்லா செய், இப்படி எனக்கு என்ன தோணுதோ அதையெல்லாம் சேர்த்து சொல்லியிருக்கிறேன். சில சமயம் பொறுத்தமான மொழியாக்கத்தை செய்யமாட்டோம் இல்லையா அப்போதெல்லாம் தமிழில் வேறு வசனத்தை பேசியிருக்கிறேன். முடிந்தளவிற்கு நம்மளுடைய இயல்பில் இருக்க வேண்டும் என்பதை யோசித்து பேசியிருக்கிறேன். நான் அப்படியே பேசினாலும் எனக்கு அப்படியே ஒட்டாது. டப்பிங் படங்கள் பார்க்கும்போது, அது ஏன் நம்ப வழக்கிலேயே இல்லை என்ற கேள்வி எழும். அதுபோல நான் டப்பிங் செய்யும் இந்த படத்தில் இருக்கக்கூடாது என்று நினைத்து பேசியிருக்கிறேன்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT