மார்வெல் தற்போது நான்காவது பேஸ் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அவெஞ்சர்ஸ் தொடர் முடிந்த பிறகு மார்வெல் என்ன மாதிரியான படங்களை எடுக்கப்போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஆர்வமாக காத்திருந்தார்கள். அதில் பிளாக் விடோவ் படமும் அடங்கும் என்று தகவல்கள் பல வெளியாகின. ஸ்கார்லட் ஜொஹன்சன் இதுவரை அவெஞ்சர்ஸ் படத்தில் மட்டுமே சூப்பர் ஹீரோவாக பார்த்திருப்போம். அவருக்கு என்று ஒரு தனி படம் இல்லாமல் இருந்தது ரசிகர்களுக்கு பெரும் கவலையாக இருந்திருந்தது. அந்த கவலை போக்கும் வகையில் மார்வெல் பேஸ் 4ல் பிளாக் விடோவ் என்று ஒரு தனி படம் எடுப்பதாக மார்வெல் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

Advertisment

black widow

இந்நிலையில் ஸ்கார்லட் ஜோஹன்சனின் பரம ரசிகர்களுக்கு இந்த படம் குறித்து எதாவது அப்டேட் வந்துவிடாதா என்று ஏங்கி தவித்தார்கள். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் இந்த படம் அடுத்த வருடம் மே மாதம் வெளியாகும் என்றும், பிளாக் விடோவின் புதிய காஸ்ட்டியூமையும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.