Advertisment

ஆபத்தான நிலையில் 'அவெஞ்சர்ஸ்' பட பிரபலம்

Marvel star Jeremy Renner in hospital

28 வீக்ஸ் லேட்டர், தி டவுன்உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெர்மி ரென்னர், உலகப் புகழ் பெற்ற மார்வெல்ஸின் 'அவெஞ்சர்ஸ்' படங்களில் ஹாவ்க்-ஐகதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தி ஹர்ட் லாக்கர், தி டவுன்படத்திற்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகருக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். கடைசியாக 'க்ளாஸ் ஆனியன்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் ஜெர்மி ரென்னர், நேற்று தனது வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் கடும் குளிர் காற்றுடன் பனிப்புயல் ஒன்று தாக்கியது. அதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் இருந்தன. இதனால் ஜெர்மி ரென்னர் பயணித்த கார் கட்டுப்பாட்டைஇழந்து சாலையோரம் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisment

விபத்தில் படுகாயமடைந்தார்ஜெர்மி ரென்னர். உடனே தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாகவும் ஆனால் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அவர் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

avengers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe