Advertisment

இந்தியாவில் எடுக்கப்பட்ட மார்வெல் நடிகர் படத்தின் ட்ரைலர் வெளியானது!

மார்வெல் சூப்பர் ஹீரோவான தோர் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படத்தில் நடித்ததைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் மற்றும் ரஸோ பிரதர்ஸ் தயாரிப்பில் உருவான எக்ஸ்ட்ராக்‌ஷன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

Advertisment

chris hemsworth

முதலில் இப்படத்திற்கு 'தாகா' என்றுதான் பெயரிடப்பட்டது. பின்னர், 'எக்ஸ்ட்ராக்‌ஷன்' என்று மாற்றியது நெட்பிளிக்ஸ் நிறுவனம். இந்தப் படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் இந்தியாவிலுள்ள அகமதாபாத், மும்பை பாந்த்ரா உள்ளிட்ட பகுதிகளில் உருவானது.மேலும் இப்படத்தில் ரந்தீப் ஹூடா, பங்கஜ் த்ரிபதி, பியான்ஷு பைன்யுல்லி உள்ளிட்ட பல இந்திய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக கிறிஸ் மார்ச் 16ஆம் தேதி இந்தியா வருவதாக இருந்தது. கரோனா அச்சத்தால் இந்தியா முழுவதும் லாக்டவுனில் இருப்பதால் நிகழ்ச்சி ரத்தானது.நேற்று தனது இந்திய ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றில் பேசி வெளியிட்டார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/GJQsT-h0FTU.jpg?itok=EeiVpx2q","video_url":" Video (Responsive, autoplaying)."]}

marvel studios
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe