அர்ஜுன் கதையில் உருவான 'மார்ட்டின்' - மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த டீசர்

Martin teaser cross 70 million views in youtube

உதய் கே மேத்தா தயாரிப்பில் நடிகர் துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மார்ட்டின்'. இப்படத்திற்கு நடிகர் அர்ஜுன் கதை எழுதியுள்ளார். இப்படத்தை ஏபி அர்ஜுன் என்பவர் இயக்க வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் கே மேத்தா, நடிகர் அர்ஜுன், இயக்குநர் ஏபி அர்ஜுன், நடிகர் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். டீசரை பார்த்த ரசிகர்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் தற்போது வரை 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும் அர்ஜுன் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

arjun
இதையும் படியுங்கள்
Subscribe