/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mark-ruffalo-teases-about-featuring-in-she-hulk-marvels-plan-on-making-a-solo-hulk-film-0001.jpg)
உலக புகழ்பெற்ற மார்வல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படங்களான ஹல்க், அவெஞ்சர்ஸ் மற்றும் தோர் ஆகிய படங்களில் 'ஹல்க்' கதாபாத்திரத்தில் நடித்தவர்மார்க் ரஃபல்லோ. அவர் தற்போது,தான் எப்படி இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வானேன் என்பது குறித்து பேசியுள்ளார்.
அதில்.... ''இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அணுகியபோது நான் மிகவும் பயந்தேன். மேலும் எனக்கு தயக்கமும் இருந்தது. அப்போது நான் சிறு, சிறு படங்களில்தான் நடித்து வந்தேன். ஹல்க் கதாபாத்திரத்தில் அதற்கு முன்பு வரை சிறப்பாக செய்யப்பட்ட விஷயத்தில் என்னால் கூடுதலாக என்ன செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. எனவே நான் இதற்குசரியானவனா என்று தெரியவில்லை என இயக்குனரிடம் கூறினேன். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ராபர்ட் டவுனி (அயர்ன் மேன்) என்னை போனில் தொடர்புகொண்டு, ரஃபல்லோ இதைச் செய்வோம். நாம் பார்த்துக் கொள்ளலாம் என அயர்ன் மேன் பாணியில் சொல்லி தைரியம் ஊட்டினார். நானும் உடனே ஒப்புக்கொண்டேன்" என கூறியுள்ளார்.
Follow Us