Skip to main content

''அயர்ன் மேன் இப்படி சொன்னதால்தான் நான் ஹல்க் கதாபாத்திரத்தில் நடித்தேன்'' - மார்க் ரஃபல்லோ ருசிகரம்!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020
bdbd

 

உலக புகழ்பெற்ற மார்வல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படங்களான ஹல்க், அவெஞ்சர்ஸ் மற்றும் தோர் ஆகிய படங்களில் 'ஹல்க்' கதாபாத்திரத்தில் நடித்தவர் மார்க் ரஃபல்லோ. அவர் தற்போது, தான் எப்படி இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வானேன் என்பது குறித்து பேசியுள்ளார்.


அதில்.... ''இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அணுகியபோது நான் மிகவும் பயந்தேன். மேலும் எனக்கு தயக்கமும் இருந்தது. அப்போது நான் சிறு, சிறு படங்களில்தான் நடித்து வந்தேன். ஹல்க் கதாபாத்திரத்தில் அதற்கு முன்பு வரை சிறப்பாக செய்யப்பட்ட விஷயத்தில் என்னால் கூடுதலாக என்ன செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. எனவே நான் இதற்கு சரியானவனா என்று தெரியவில்லை என இயக்குனரிடம் கூறினேன். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ராபர்ட் டவுனி (அயர்ன் மேன்) என்னை போனில் தொடர்புகொண்டு, ரஃபல்லோ இதைச் செய்வோம். நாம் பார்த்துக் கொள்ளலாம் என அயர்ன் மேன் பாணியில் சொல்லி தைரியம் ஊட்டினார். நானும் உடனே ஒப்புக்கொண்டேன்" என கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆபத்தான நிலையில் 'அவெஞ்சர்ஸ்' பட பிரபலம்

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

Marvel star Jeremy Renner in hospital

 

28 வீக்ஸ் லேட்டர், தி டவுன் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெர்மி ரென்னர், உலகப் புகழ் பெற்ற மார்வெல்ஸின் 'அவெஞ்சர்ஸ்' படங்களில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தி ஹர்ட் லாக்கர், தி டவுன் படத்திற்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகருக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். கடைசியாக 'க்ளாஸ் ஆனியன்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 

 

இந்த நிலையில் ஜெர்மி ரென்னர், நேற்று தனது வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் கடும் குளிர் காற்றுடன் பனிப்புயல் ஒன்று தாக்கியது. அதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் இருந்தன. இதனால் ஜெர்மி ரென்னர் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மோதி விபத்துக்குள்ளானது. 

 

விபத்தில் படுகாயமடைந்தார் ஜெர்மி ரென்னர். உடனே தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாகவும் ஆனால் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. இதனால் அவரது  ரசிகர்கள் அவர் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  

 

 

Next Story

அவெஞ்சர்ஸை முந்தியதா 'அவதார் 2' - இந்தியாவின் முதல் நாள் வசூல்?

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

avatar 2 first day box office collection in india

 

உலகப் புகழ் பெற்ற 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்'  என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் 3டி-யில் 160 மொழிகளில் நேற்று (16.12.2022) உலகம் முழுவதும் வெளியானது. 

 

தமிழ்நாட்டில் திரையரங்க உரிமையாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் பங்கு தொகையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததால் 200க்கும் குறைவான திரையரங்குகளில் இப்படம் வெளியானதாகப் பேசப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வெளியிடாத சில முன்னணி திரையரங்குகளும் இப்போது வெளியிடத் தொடங்கியுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

இந்த நிலையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் சுமார் ரூ. 2 ஆயிரம் கோடியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இப்படம் கனடா மற்றும் அமெரிக்காவில் முதல் காட்சியில் மட்டும் ரூ. 140 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

 

இந்தியாவைப் பொறுத்தவரை 'அவதார் 2' படம் முதல் நாளில் ரூ.40 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியாகும் பட்சத்தில் இந்தியா பாக்ஸ் ஆஃபீசில் முதல் நாள் அதிக வசூலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் (ரூ.53 கோடி) உள்ளது குறிப்பிடத்தக்கது.