Advertisment

"பாடகராகவும் அறிமுகமாவது மகிழ்ச்சி" - விஷால்

mark antony update vishal as singer

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

Advertisment

alt=" Ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d86b60f5-6ee9-4366-aab6-cd552c585fd2" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%20%281%29.jpg" />

Advertisment

இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில், நடிகை அபிநயா, மலேசிய நடிகர் டிஎஸ்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியான நிலையில் முதல் பாடல் குறித்த அப்டேட் நேற்று வெளியானது. 'அதிருதா மாமே' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை டி.ராஜேந்திரன் பாடியுள்ளார். வருகிற 15ஆம் தேதி இப்பாடல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின்முதல் பாடலின் தெலுங்கு பதிப்பின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விஷால் பாடியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விஷால், "மார்க் ஆண்டனியின் தெலுங்குப் பதிப்பிற்காக ஒரு பாடலைப் பாடியது ஒரு அற்புதமான உணர்வு. மேலும் இப்படத்தில் பாடகராகவும் அறிமுகமாவது பெரும் மகிழ்ச்சி. பாடகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள், ஒரு பாடலைப் பாடுவதற்கு நீங்கள் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும் என்பதை பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

actor vishal Mark Antony
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe