/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/268_10.jpg)
விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி' படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி வெளியானது. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 28 ஆம் தேதி இப்படம் இந்தியில் வெளியானது.
இதையடுத்து இப்படத்தின் இந்தி பதிப்பிற்காகத்தணிக்கை வாரிய குழுவில் 6.5 லட்சம் ஊழல் நடந்ததாக விஷால் பரபரப்பான ஒரு குற்றச்சாட்டை வைத்தார். இந்த குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவித்து எங்கள் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி விசாரணை நடத்த மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன், விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட படக்குழுவினரை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)