அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன்  தயாரித்து, எழுதி, இயக்க, புதுமுகம்  சாய்ஸ்ரீ பிரபாகரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மரியா’. இப்படத்த்தில் அறிமுக நடிகை சாய்ஸ்ரீ பிரபாகரன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பவேல் நவகீதன் ஒரு மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில்  நடித்திருக்க சித்து குமரேசன், விக்னேஷ் ரவி சுதா புஷ்பா, ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 

இப்படம் சென்னை அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மற்றும் சிதம்பரம் பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்றுள்ளது. இத்தாலி, மலேசியா, லண்டன், நேபாளம், புது தில்லி, ஹரியானா, மும்பை, கேரளா, உத்தரபிரதேசம், கொல்கத்தா ஆகிய நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. மேலும் சிறந்த இந்திய திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை, சிறந்த இசை என  பல விருதுகளையும் பெற்றுள்ளது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.