Advertisment

'மெரினா புரட்சி' படத்திற்கு 7 நாட்களுக்குள் தணிக்கை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

marina puratchi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக 8 நாட்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 'மெரினா புரட்சி' திரைப்படத்திற்கு 100 நாட்களாகியும் தணிக்கை தரப்படவில்லை. காரணம் சொல்லாமல் 2 முறை நிராகரித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. பட தயாரிப்பு நிறுவனம் நாச்சியாள் பிலிம்ஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்திருந்தது. மேலும் மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நீதிமன்றம் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ளார்கள். அதில்.... "இந்த தீர்ப்பு நகல் கிடைத்த 2 நாட்களுக்குள் படத்தின் இயக்குனர் எம்.எஸ். ராஜ் தன்னிடமுள்ள ஆதாரங்கள் விளக்கங்கள், நியாயங்களுடன் ரிவைசிங் கமிட்டி முன்பு ஆஜராக வேண்டும். அதிலிருந்து 7 நாட்களுக்குள் தணிக்கைத்துறை, படத்திலுள்ள நல்ல நோக்கங்கள் மற்றும் அதன் தன்மை அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.

marina puratchi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe