'மெரினா புரட்சி' படத்தை தடை செய்கிறதா பீட்டா !

marina puratchi

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் எம்.எஸ். ராஜ் இயக்கத்தில் உருவான மெரினா புரட்சி படத்தைப் பார்த்த தணிக்கை குழு எந்த காரணமும் சொல்லாமல் படத்தை (Revising Committee) ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினர். படத்தை பார்த்த நடிகை கவுதமி தலைமையிலான ரிவைசிங் கமிட்டிக்கு குழு எந்த காரணமும் சொல்லாமல் மீண்டும் தடை விதித்துள்ளனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Indian Cinematograph Act 1983 விதியின்படி ரிவைசிங் கமிட்டி மறுப்பு தெரிவித்தால் FCAT எனப்படும் டெல்லி டிரிப்யூனல் சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டு 2வது ரிவைசிங் கமிட்டிக்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது. காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ எனும் ஐயம் எழுகிறது. தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் மெரினா புரட்சி படத்தை முடக்கும் அனைத்து சதிகளையும் முறியடிக்க நாச்சியாள் பிலிம்ஸ் குழுவினர் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

jallikattu marina puratchi
இதையும் படியுங்கள்
Subscribe