Advertisment

“தமிழ்த் திரையுலகின் பெரும் அடையாளம்” - வடிவேலுவுக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து

mari selvaraj wishes vadivelu birthday

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக 280 படங்களுக்கு மேலாக நடித்துள்ளவர் வடிவேலு. இவரது நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ட்ரெண்டிங்கில் உள்ளன. நகைச்சுவை கதாபாத்திரம் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரம், முக்கிய கதாபாத்திரம் மற்றும் முதன்மை கதாபாத்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். நடிப்பது மட்டுமல்லாமல் பாடகராகவும் பல்வேறு படங்களில்பாடியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் வடிவேலு. அவருக்குத்திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாரி செல்வராஜ், "தமிழ்த் திரையுலகின் பெரும் அடையாளமாக இருக்கும் அன்பு அண்ணன் வைகைப் புயல் வடிவேலுவிற்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisment

மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த மாமன்னன் படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்றது. அதில் 'ராசாக்கண்ணு...' பாடலைப் பாடியிருந்தார். இதையடுத்து சந்திரமுகி 2 படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

mari selvaraj actor Vadivelu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe