துருவ் விக்ரம் பிறந்தநாள்; சர்ப்ரைஸ் செய்த மாரி செல்வராஜ் 

mari selvaraj wishes dhruv vikram and release new poster of bison

ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான துருவ் விக்ரம், அடுத்ததாக தனது தந்தை விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் நேரடியாக ஓ.டி.டி.-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தையடுத்து மாரி செல்வராஜ் இயக்கி வரும் பைசன் படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார்.

பா.ரஞ்சித் தயாரிக்கும் இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வருதாக கூறப்படுகிறது. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கிய நிலையில் கடந்த ஜூன் 18ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 70 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

துருவ் விக்ரம் இன்று(23.04.2024) தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலர் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பைசன் படத்தின் புதிய போஸ்டரை சர்ப்ரைஸாக வெளியிட்டு மாரி செல்வராஜ் துருவ் விக்ரமுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில் ,“எங்கள் அன்பான துருவ் விக்ரமுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தாண்டு பைசன் பயணத்தை காண தயாராகுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Bison dhruv vikram mari selvaraj
இதையும் படியுங்கள்
Subscribe