Advertisment

மாரி செல்வராஜின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்

mari selvaraj vaazhai movie first single Thenkizhakku released

Advertisment

இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமைவைத்துபைசன் என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வர்ய்கிறார். இதனிடையே வாழை என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் வெளியானது. இதில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நான்கு சிறுவர்கள் நடித்திருக்க, கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவர் இசையில் முதல் பாடலான ‘தேன் கிழக்கு...’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை பாடகி தீ பாடியுள்ளார். கவிஞர் யுகபாரதி வரிகள் எழுதியுள்ளார். இப்பாடல் பள்ளியில் படிக்கும் சிறுவனுக்கும் ஆசிரியருக்கும் இடையே உள்ள அன்பை விவரிக்கும் விதமாக அமைந்துள்ளது. அதற்கேற்ப ‘ஒத்தையில போகும், வெட்ட வெளி மேகம், மெட்டெடுத்து பாடாதோ ரெக்க விரிச்சி, சித்தெரும்பு போடும் நட்சத்திர கோலம், சொல்லெடுத்து வீசாதோ, உன்ன ரசிச்சு...’ உள்ளிட்ட பல வரிகள் பாடலில் இடம்பெறுகின்றன.

இப்பாடலோடு ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி அடுத்த மாதம் 23ஆம் தேதி (23.08.2024) திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.

Advertisment

santhosh narayanan mari selvaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe