/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/178_3.jpg)
பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படத்திற்குக் கிடைத்த வெற்றி காரணமாககுறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர், அடுத்தாக பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்படத்தை இயக்குவதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை மாரிசெல்வராஜ் இயக்க இயக்கவுள்ளார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு பிரபல மலையாள நடிகர் ஃபகத்பாசில் ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு நடிப்பது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "ஒரு தொடர் கனவு நிறைவடைந்தது. மாமன்னனில் வைகைபுயல்" எனக் குறிப்பிட்டு அவருடன்இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
ஒரு தொடர் கனவை நிறைவடைந்தது? மாமன்னனில் வைகைபுயல் ? pic.twitter.com/wgv6NqRDa5
— Mari Selvaraj (@mari_selvaraj) March 4, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)