mari selvaraj rescued people from flood in tuticorin

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில், மாநிலப் பேரிடர் மீட்புக் குழு, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

அமைச்சர்கள் உதயநிதி, தங்கம் தென்னரசு உள்ளிட்ட அதிகாரிகள் பலர் தூத்துக்குடியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் இயக்குநர் மாரி செல்வராஜும் களத்தில் இருந்து உதவி செய்து வருகிறார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் மீட்பு பணிகள் குறித்து தொடர்ச்சியாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதனிடையே மாரி செல்வராஜ் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலான நிலையில், அது விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்பட்டது. அதற்கு பதில் தரும் விதமாக, “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல… நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுருந்தார்.

Advertisment

இந்த நிலையில் மாரி செல்வராஜ், மற்றும் குழுவினர் மாரி செல்வராஜ் மற்றும் குழுவினர் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் சென்று காப்பாற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்கின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.