Advertisment

மாரி செல்வராஜ் - த்ருவ் விக்ரம் இணையும் படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான புதிய தகவல்!

mari selvaraj

'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குநர் மாரி செல்வராஜ், 'கர்ணன்' படத்தின் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். இவ்விரு படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக த்ருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார். இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இப்படத்தில் நடிகர் த்ருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

கரோனா இரண்டாம் அலை காரணமாக முடங்கியிருந்த திரைத்துறை, தற்போது மெல்ல மீண்டு பழைய நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், த்ருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் இணையும் படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இயக்குநர் மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

நடிகர் த்ருவ் விக்ரம், தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'சீயான் 60' படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

dhruv vikram mari selvaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe