Advertisment

மாரி செல்வராஜின் அடுத்த திட்டம் - வெளியான சுவாரசிய தகவல்

mari selvaraj next with actor kalaiyarasan

Advertisment

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' பட வெற்றிக்கு பிறகு தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனிடையே துருவ் விக்ரமுடன் ஒரு படம் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் 'மாமன்னன்' படத்தை தொடர்ந்து பிரபல ஓடிடி தளத்திற்கு ஒரு வெப் சீரிஸ் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸில் கலையரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இதற்கான படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

kalaiyarasan mari selvaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe