Advertisment

உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்க்கும் மாரி செல்வராஜ்!

mari selvaraj

நடிகரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொகுதியில் தொடர்ந்து களப்பணியாற்றிவரும் உதயநிதி ஸ்டாலின், அதே நேரத்தில் நடிப்பிலும் கவனம் செலுத்திவருகிறார். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் உதயநிதி நடித்துவருகிறார். இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ், உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்தைத் தவிர்த்து, உதயநிதி ஸ்டாலின் கைவசம் ‘ஆர்டிகிள் 15’ ரீமேக், ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்கள் உள்ளன.

Advertisment

மேற்கண்ட படங்களைத் தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தைத் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘கர்ணன்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், அடுத்ததாக த்ருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்திவருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தை முடித்துவிட்டு உதயநிதி ஸ்டாலின் படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்த மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளார்.

Advertisment

mari selvaraj Udhayanidhi Stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe