/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/440_9.jpg)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியாகி தற்போது வரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் வாழை. இப்படத்தை இயக்கியதை தாண்டி மாரி செல்வராஜே தயாரிக்கவும் செய்திருந்தார். இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க அவர்களுடன் இணைந்து கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இப்படம் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது வாழை தார் ஏற்றி செல்லும் லாரி கவிழ்ந்து அதன் மேல் பயணம் செய்த 19 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த உண்மை சம்பவத்தின் போது கால்களை இழந்த தூத்துக்குடியை சேர்ந்த பனிமாதா என்ற பெண், சமீபத்தில் தனக்கு மூன்று சக்கர வாகனம் இருந்தால் உதவியாக இருக்கும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் மாரி செல்வராஜ் அந்த பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற மாரி செல்வராஜ், அவருக்கு மூன்று சக்கரம் வாகனம் வாங்கி கொடுத்துள்ளார் மேலும் ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் கொடுத்து உதவியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)