Skip to main content

தனுஷ் தயாரிப்பில் மாரி செல்வராஜ்?

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

mari selvaraj direct under dhanush production

 

பரியேறும் பெருமாள், கர்ணன் பட வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வரும் மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாக உள்ளது. 

 

இதனிடையே 'வாழை' என்ற தலைப்பில் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர். இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நான்கு சிறுவர்கள் நடிக்க கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

 

இந்த படத்தை அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் துருவ் விக்ரம் படத்தை முடித்துவிட்டு தனுஷ் தயாரிப்பில் ஒரு படம் இயக்க மாரி செல்வராஜ் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மீண்டும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார்கள் என அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. 

 

தனுஷின் 'வொண்டர்பார் ஃபில்ம்ஸ்' கடைசியாக 2018ல் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி 2' படத்தை தயாரித்திருந்தது. அதன்பிறகு சில காரணங்களால் எந்தப் படங்களும் தயாரிக்கவில்லை. இந்த சூழலில் மீண்டும் தயாரிக்க தொடங்கவுள்ளதாகச் சொல்லப்படும் இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என் அம்மாவின் அன்பு மாதிரி...” - இளையராஜா இசை குறித்து வெற்றிமாறன்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
vetrimaaran speech in ilaiyaraaja biopic event

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்த நிலையில், மேலும் தனுஷ், இளையராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வெற்றிமாறன் பேசுகையில், “எனக்கு ராஜா சார் இசையை எப்போது கேட்டாலும் ஒன்னுதான் தோணும். அது எங்க அம்மாவுடைய அன்பு மாதிரி. நிலையானது. எப்போதுமே மாறாது. வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்தாலும் அவரின் இசை ஏற்படுத்துகிற உணர்வு எப்போதுமே அப்படியே தான் இருந்துருக்கு. அவருடன் வேலை பார்ப்பது ரொம்ப இலகுவாக இருக்கும். சமமாக நம்மை நடத்துவார்.

அவர் முதல் படம் பண்ணும்போது எனக்கு ஒரு வயசு. ஆனால் என்னோடு அவர் பேசும்போது, படம் பார்த்துவிட்டு பரிந்துரை சொல்லலாமா எனக் கேட்டார். அவர் அப்படி கேட்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. ஆனால் கேட்டார். அப்படிப்பட்ட இடத்தில் தான் ஒரு இயக்குநரை அவர் வைத்து வேலை பார்ப்பார். அவர் இசையமைப்பதை பார்த்தால், இசையமைப்பது ரொம்ப ஈஸி என தோணும். சிரமமே இல்லாமல் வேலை பார்ப்பார். என்னுடைய பார்வையில் அவர் ஒரு மியூசிஷியன் என்பதை விட மெஜிசியன் தான். அவருடைய வாழ்க்கையை படமாக எடுப்பது நம் நாட்டினுடைய பெரிய ஆவணம்.

அவர் இப்போது வேலை பார்த்து வருகிற வாழ்க்கை, இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னால் இருக்கும் 40 வருட வாழ்க்கை, இவ்வளவு காலங்களையும் ஒரு நாட்டினுடைய வரலாற்று பதிவாக அவருடைய இசையில் நாம் சேர்க்க வேண்டும். எல்லாருடைய வாழ்க்கையிலும் தனிப்பட்ட முறையில் அவருடைய இசை இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கை படமாக உருவாகும் போது தமிழ் இசை கேட்டு வளர்ந்தவர்கள் அத்தனை பேருடைய படமாக இப்படம் இருக்கும். இந்த படத்தில் ஏதாவது ஒரு விதத்தில் நான் பங்காற்ற வேண்டும் என விருப்பப்படுகிறேன். அருணுக்கு இப்படம் ஒரு கிஃப்ட். தனுஷிற்கு மற்றுமொரு சவால். எந்த சவாலை கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக தனுஷ் தாண்டி வருவார். இந்த படத்தில் ராஜா சாருடைய இசையை கேட்க ஆர்வமாக இருக்கேன்” என்றார்.

Next Story

“எனக்கு வராதது எல்லாமே அவருக்கு வருகிறது” - கமல் ஆச்சர்யம்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
kamal speech at ilaiyaraaja biopic movie event

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே ப்ரைம் புரடைக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் இளையாரஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்த நிலையில், மேலும் தனுஷ், இளையராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கமல் பேசுகையில், “ஒரு டைரக்டருக்கும் திரைக்கதை ஆசிரியருக்கும் ஆரம்பத்தில் ஏற்படும் குழப்பம் எனக்கும் இருக்கிறது. அவர் தான் இளையராஜா என முதலில் எனக்கு தெரியாது. பின்பு உங்களுடைய இசைக்கு ரசிகன் என ஆரம்பிச்சு, அண்ணன், ஐயா என தொடர்ந்தது. 

குணா படத்தில், குணாவுக்கும் அபிராமிக்கும் ஒரு காதல் பாட்டு போட்டு கொடுத்துருக்கார் என எல்லாரும் நினைச்சிகிட்டு இருக்காங்க. அப்படி இல்லை. அது எங்களுடைய காதல் பாட்டு. என் கண்மணிக்கு நான் எழுதிய கடிதம், அதற்கு இசையமைத்து விட்டார். அவருடைய வாழ்க்கையை 8 பாகமாக கூட எடுக்கலாம். ராஜாவை பிடிக்காதவர்கள் எடுத்தால் அது ஒரு வகையான படம். எப்படி எடுத்தாலும் இசை மேதை என்பவர் தனித்து நிற்பார். இதை பிடிக்காதவங்களால் கூட மறுக்க முடியாது. அவர் 6 அடியெல்லாம் கிடையாதுங்க என பிடிக்காதவர்கள் சொல்வார்கள். ஆனால் அவருடைய 1அடி பாட்டு கேட்டால் போதும். 

எனக்கு இசை புரியும். ஆனால் அதில் பேராசை கிடையாது. அதனால் அவர் மேல் பொறாமையே கிடையாது. அவர் செய்வதெல்லாம் நானே செய்தது போல சந்தோஷம். எங்க அப்பாவிற்கு பாடவே வராது. ஆனால் ரசிப்பார். அவர் தான், அவருக்கு பாட வரவில்லை என சொல்லி உங்களுக்கு வருது... போய் கத்துக்கங்க என்றார். எங்க அப்பாவுடைய நிலையிலிருந்து தான் இளையராஜாவை பார்க்கிறேன். எனக்கு வராதது எல்லாமே அவருக்கு வருகிறது. எப்படி இது என ஆச்சர்யப்பட்டுகிட்டே பல வருடங்கள் கடந்துவிட்டன.     

இளையராஜவை பத்தி பல கோணங்கள் இருக்கிறது. அவர் கூட வேலை பார்த்தவங்க சொல்கிற கதை, இசையமைப்பாளர்கள் சொல்கிற கதை, இசை தெரியாமல் இளையராஜாவை டைரியாக வைத்திருப்பவர்கள் சொல்கிற கதை என சொல்லலாம். இன்று நான் பிறக்கவேயில்லை என்றாலும் இன்னும் ஒரு நூறு வருஷம் கழித்து பிறந்திருந்தாலும், அவர் வாழும் காலத்தில் தான் வாழ்ந்திருப்பேன். ஏனென்றால் அவர் என்பது அவருடைய இசை. இயக்குநர் ரொம்ப அழுத்தத்தை எடுத்துக்க வேண்டாம். உங்கள் பார்வையில் உங்களுக்கு சொல்ல தோனுகின்ற அந்த நிஜத்தை சொல்லுங்கள். இந்த படம் வெறும் இளையராஜா பற்றி சொல்லும் படமல்ல. பாரத் ரத்னா இளையராஜாவை பற்றிய படம். இது வாழ்த்து இல்லை. கோரிக்கை” என்றார்.