mari selvaraj direct under dhanush production

பரியேறும் பெருமாள், கர்ணன்பட வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வரும் மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உதயநிதி நடிப்பில்கடைசி படமாக இப்படம் வெளியாக உள்ளது.

Advertisment

இதனிடையே 'வாழை' என்ற தலைப்பில் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர். இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நான்கு சிறுவர்கள் நடிக்ககலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Advertisment

இந்த படத்தை அடுத்து துருவ்விக்ரம் நடிக்கும் படத்தை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் துருவ்விக்ரம் படத்தை முடித்துவிட்டு தனுஷ் தயாரிப்பில் ஒரு படம் இயக்க மாரி செல்வராஜ் முடிவு செய்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு மீண்டும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார்கள் என அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் 'வொண்டர்பார் ஃபில்ம்ஸ்'கடைசியாக 2018ல் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி 2' படத்தை தயாரித்திருந்தது. அதன்பிறகு சில காரணங்களால் எந்தப்படங்களும் தயாரிக்கவில்லை. இந்த சூழலில் மீண்டும் தயாரிக்க தொடங்கவுள்ளதாகச் சொல்லப்படும் இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.