mari selvaraj

Advertisment

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், தற்போது நடிகர் தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மாரி செல்வராஜ் - திவ்யா தம்பதிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், இது இரண்டாவது குழந்தையாகும். இதனையடுத்து, இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.