Advertisment

மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின் படத்தின் புதிய அறிவிப்பு

mari selvaraj and udhayanidhi stalin movie update out now

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படத்திற்குக் கிடைத்த வெற்றி காரணமாகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர், அடுத்தாக பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்படத்தை இயக்குவதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தை மாரிசெல்வராஜ் இயக்கதிட்டமிட்டுள்ளார். இதற்கான முதற்கட்ட பணியையும் அவர்தொடங்கியுள்ளார்.இப்படத்தில் ஸ்டாலினுடன் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர்ஃபகத் பாசில், நடிகர் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின்ரெட் ஜெயிண்ட் நிறுவனம் நாளை(4.3.2022) காலை 10 மணிக்கு முக்கியமான அறிவிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த போஸ்டரைஇயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் உதயநிதி- மாரி செல்வராஜ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகுமா என்ற கோணத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

actor Vadivelu Udhayanidhi Stalin mari selvaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe