Advertisment

சம்பவத்திற்கு ரெடியான மாரி செல்வராஜ்... நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கும் உதயநிதி

mari selvaraj and udhayanidhi stalin movie tittle poster released

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படத்திற்குக் கிடைத்த வெற்றி காரணமாகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர், அடுத்தாக பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்படத்தை இயக்குவதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தை மாரிசெல்வராஜ் இயக்க இயக்கவுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இப்படம் குறித்தஅறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், பிரபல மலையாளநடிகர்ஃபகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு 'மாமன்னன்' என பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன் படக்குழு டைட்டில் போஸ்டரையும்வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் பெரிய கல்லுக்கு கீழே மாடுகள், காக்கைகள் மேலும் கீழுமாக பார்ப்பதை பார்த்த ரசிகர்கள் மாரி செல்வராஜூம்உதயநிதியும்பலமான சம்பவத்திற்கு தயாராகிவிட்டார்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

actor Vadivelu Udhayanidhi Stalin mari selvaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe