/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/472_7.jpg)
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, கெளதம் வாசுதேவ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை பாகம் 2. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே விடுதலை பாகம் 1 வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. குறிப்பாக ட்ரைலரில் இடம்பெற்றிருந்த வசனங்கள் சினிமாவை தாண்டி அரசியல் வட்டாரங்களிலும் கவனம் ஈர்த்தது.
பலரது எதிர்பார்ப்பை தாண்டி கடந்த 20ஆம் தேதி இப்படம் வெளியானது. முதல் பாகத்தில் பல்வேறு உண்மை சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் ஒன்று சேர்த்து இயக்கியிருந்த வெற்றிமாறன் இந்தப் படத்திலும் அதை தொடர்ந்திருக்கிறார். இந்தப் படத்தில் வாத்தியார் கதாபாத்திரம் எதற்காக பொது வாழ்க்கைக்கு வந்தார், பின்பு ஏன் ஆயுதம் ஏந்திய போராட்டத்துக்கு மாறினார், அதன் பிறகு அவர் என்ன ஆனார்... என பல்வேறு கேள்விகளுக்கு இந்தப் படம் பதிலளிக்கிறது.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தை பார்த்த வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., “முக்கியமான அரசியல் படைப்பு” என வெற்றிமாறன், விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினரைப் பாராட்டினார். இந்த நிலையில் மாரி செல்வராஜ் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் விடுதலை -2 பார்த்தேன். மனித சமூக ஓர்மைக்கான ஆவேசமான அரசியலை அவசியமான நேரத்தில் அப்பட்டமாகவும் அதே நேரத்தில் நேர்மையான கலைபடைப்பாகவும் பதிவு செய்திருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துகளும் பேரன்பும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)