இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கெத்து தினேஷ், ஆர்யா நடிப்பில் ‘வேட்டுவம்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி, வேளாங்கண்ணி, வேதாரண்யம் மற்றும் விழுந்தமாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. அந்த வகையில் விழுந்தம்பாடி கிராமத்தில் நேற்று நடந்த படப்பிடிப்பின் போது கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது காரை இயக்கிய ஸ்டன்ட் மாஸ்டர் எஸ். மோகன்ராஜ், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.   

Advertisment

இந்த உயிரிழப்பு சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விபத்துக்குள்ளான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனிடையே இயக்குநர் மாரி செல்வராஜ், உயிரிழந்த மோகன் ராஜுக்கு இரங்கல் தெரிவித்து அவருடனான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ் அண்ணன் மரணம் என்ற செய்தி இதயத்தில் அதிர்ச்சியையும் வேதனையையும் நிரப்புகிறது. 

378

வாழை இறுதிகாட்சியில் நீங்கள் அந்த லாரியை துணிச்சலாக கவிழ்த்து எல்லாரையும் கலங்கடித்த நாட்களை நெஞ்சு படபடக்க இன்று நினைத்துகொள்கிறேன். நீங்களும் உங்களின் துணிச்சலும் என்றும் நினைவில் இருப்பீர்கள் அண்ணா” எனக் குறிப்பிட்டுள்ளார்.