Advertisment

"மக்களின் சுயத்தை கேள்வி கேட்டவர்" - மாரி செல்வராஜ் உருக்கம்

mari selvaraj about Nellai Thangaraj

மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்ற நெல்லை தங்கராஜ், உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்குத்திரைப் பிரபலங்கள்மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். மக்கள் கலைஞரான தங்கராஜ், பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அறிமுகமாகி, அதில் வெளிப்படுத்திய உணர்வுப்பூர்வமான நடிப்பால் நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர். அன்னாரது மறைவினால் வாடும் குடும்பத்தினருக்கும், கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இதனிடையே மாரி செல்வராஜ் தனது இரங்கலைத்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அவரை தேடி கண்டுபிடித்து சினிமாவுக்கு கொண்டு வந்தேன். எங்க இரண்டு பேருக்கும் பயங்கரமான ஒரு உறவு. அப்பா பையன் போல... இப்பவும் வேலைக்கு போய்க்கிட்டு இருக்கிற மனுஷன். தன் குடும்பத்துக்காகவும் தனக்காகவும் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருந்தார். அவருடைய மரணம் மிகப்பெரிய வலியை கொடுத்திருக்கு. ஒரே ஒரு படத்தின் மூலம் நிறையமக்களின் மனதில் இடம் பிடித்தவர். மேலும் இடம் பிடித்தவர்களிடம் அவர்களது அகத்தை, சுயத்தை கேள்வி கேட்டவர். அவருடைய வாழ்க்கையில் அவரது கனவுகள் தாமதமாகத்தான்ஆரம்பித்தது. அது சீக்கிரம் முடியும் என்று எதிர்பார்க்கவில்லை" என்றார்.

cm stalin pariyerumperumal mari selvaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe