/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/002_23.jpg)
பா.ரஞ்சித் மற்றும் அருண் பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பாட்டல் ராதா’. இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மதுவிற்கு அடிமையான ஒருவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இப்படம் குறித்து மாரி செல்வராஜ் தனது கருத்தை தெரிவித்து படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அவர் வெள்யிட்ட எக்ஸ் பதிவில், “பாட்டில் ராதா பார்த்தேன். சமூகம் முற்றிலுமாக ஒதுக்கி வேண்டவே வேண்டாமென்று விலக்கி வைத்த ஒரு மனிதனின் கதையை தன் நேர்த்தியான நேர்மையான திரைக்கதையின் மூலம் இங்கு தனித்துவிடப்பட்ட ஒவ்வொரு தனிமனிதனின் பிழைகளும் வலிகளும் முட்டாள்தனங்களும் இச்சமூகத்தின் பிழைகளே இச்சமூகத்தின் வலிகளே என்னும் வாழ்வியல் அறத்தை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் தினகர். இயக்குநருக்குக்கும் மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களும் ப்ரியமும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/001_38.jpg)
முன்னதாக இப்படத்தின் ப்ரீமியர் காட்சியை பார்த்து முடித்த மாரி செல்வராஜ் பின்பு தியேட்டர் வளாகத்தில், “சின்னதாக ஆரம்பிக்கக்கூடிய சில பழக்கவழக்கங்கள் நம் குடும்பத்தையும் சமூகத்தையும் பாழாக்குகிறது என்பதை சொல்லக் கூடிய படம். இது படமா இல்லை பக்கத்து வீட்டில் நடக்கும் வாழ்க்கையா என யோசிக்கிற அளவிற்கு நேர்த்தியாக எடுக்கப் பட்டுள்ளது. இந்தப் படம் சமூகத்துக்கு மிகவும் அவசியமான படம். குரு சோமசுந்தரம் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இந்தக் கதை யாருக்குமே அந்நியப்பட்டது கிடையாது. நிச்சயம் இந்த படம் முக்கிய படமாக இருக்கும்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  
 Follow Us