'மார்கழி திங்கள்' - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்

Margazhi Thingal first look poster released by dhanush

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா ஹீரோவாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் பல படங்களில் நடித்துள்ள நிலையில் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் படம் 'மார்கழி திங்கள்'. இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் தயாரிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் இசை பணிகளை ஜி.வி.பிரகாஷ் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரை பார்க்கையில் கிராமத்து பின்னணியில் கதை அமைந்திருப்பது போல் தெரிகிறது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்குகிறது.

இயக்குநர் பாரதிராஜாஅருள்நிதியுடன் இணைந்து ‘திருவின் குரல்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'தாய்மெய்' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

actor dhanush Bharathi Raja
இதையும் படியுங்கள்
Subscribe