கீதா மாலி, மாராத்தி திரையுலகில் பிரபல பாடகியாக வலம் வந்தவர். பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ள இவர், சுயாதீன இசை ஆல்பங்களும் வெளியிட்டிருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/geeta-malik-inside.jpg)
நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருந்த கீதா, நேற்று மும்பை திரும்பினார். அங்கிருந்து நாசிக் நகரில் உள்ள அவரது சொந்த ஊருக்குக் செல்வதற்காக காரில் சென்றுகொண்டிருந்தார். கீதாவின் கணவர் விஜய்யும் உடன் இருந்தார்.
தானே மாவட்டத்தில் உள்ள சாஹப்பூர் அருகே, நேற்று அதிகாலை 3 மணியளவில் கார் வந்துகொண்டிருந்தபோது ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கீதாவும் அவர் கணவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அருகே உள்ள சாஹ்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீதா உயிரிழந்தார். அவர் கணவர் விஜய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IIT Madras_2.jpg)