Marathi actor and director Ravindra Mahajani passed away

Advertisment

மராட்டிய நடிகரும்இயக்குநருமான ரவீந்திர மகாஜானி (77), புனேவில் ஒரு வாடகை குடியிருப்பில் நேற்று சடலமாக மீட்கப்பட்டது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் தகவலின் படி, நேற்று மாலை 4.30 மணியளவில் அவரது குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டு, அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரைத் தொடர்புகொண்டனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளே பூட்டப்பட்டிருந்தகதவை உடைத்துப் பார்க்கையில், ரவீந்திர மகாஜானி இறந்து கிடந்துள்ளார். உடலை மீட்டெடுத்த போலீசார் அவர் இறந்து 3 நாட்கள் இருக்கும் எனச் சந்தேகிக்கின்றனர். மேலும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது.

ரவீந்திர மகாஜானி, கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.