Advertisment

"தல ரசிகர்களுக்கு இதைக் கூறிக்கொள்கிறேன்..." - ஈரானைச் சேர்ந்த பைக் ரைடர் மேரல் யாசர்லூ பதிவு!

ajith

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்திற்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப்பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. அஜித்தின் 60ஆவது படமாக உருவாகிவரும் இப்படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தையொட்டி வெளியாகவுள்ளது. தன்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பிக்கும் முன் நீண்ட பைக் பயணத்திற்கு அஜித் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ரஷ்யாவின் முக்கிய பகுதிகளில் பைக் பயணம் செய்துவந்த அஜித், இந்த முறை பல நாடுகளை உள்ளடக்கிய மிக நீண்ட பயணத்திற்குத்திட்டமிட்டுள்ளார். அதற்காக, இது போன்ற பைக் பயணங்களைச் செய்துள்ள சில பைக் ரைடர்களுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில், ஈரானைச் சேர்ந்த பைக் மேரல் யாசர்லூ என்ற வீராங்கனையிடமிருந்தும் ஆலோசனை பெற்றுவருகிறார். இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள்கூட சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகின.

Advertisment

இந்த நிலையில், நடிகர் அஜித் குறித்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை மேரல் யாசர்லூ பதிவிட்டுள்ளார். அப்பதிவில், "பி.எம்.டபிள்யூ மோட்டார்ஆட் தரப்பிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு சக ரைடர் அஜித்குமாரை நீங்கள் சந்திக்க வேண்டும் என்றும் அவரிடம் உங்கள் உலக பயணம் பற்றிய அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள். இருவருக்கும் பொருத்தமான நேரத்தில் சந்திக்க முடிவெடுத்தோம். அவர் இந்தியாவின் தென்பகுதியில் பிரபலமான நடிகர் என்பது எனக்கு தெரியவந்தது. நாங்கள் சந்தித்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகும்வரை அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பது எனக்கு தெரியாது. ஒருவரது தொழில் அடிப்படையில் அவரைப் பற்றிய எந்த முடிவிற்கும் நான் வரமாட்டேன். நம் அனைவருக்கும் வேறுவேறு தொழில்கள் இருக்கின்றன என்பதை உறுதியாக நம்புகிறேன். ஒரு மனிதராக நாம் எப்படி இருக்கிறோம் என்பதே மற்றவர்களிடம் இருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டும். அஜித்துடனான என்னுடைய அனுபவம் சிறப்பாக இருந்ததை தல ரசிகர்களுக்கு கூறிக்கொள்கிறேன். அவர் மிகப்பணிவானர் மற்றும் கனிவானவர். அவரை தெரிந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

ACTOR AJITHKUMAR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe