Marakuma Nenjam - Rakshan Interview

Advertisment

திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘மறக்குமா நெஞ்சம்’ திரைப்படக் குழுவினரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். கலகலப்பான பேட்டியில் நம்மிடையே பல்வேறு சுவாரசியமான விசயங்களை பகிர்ந்து கொண்டனர்.

ரக்சன் பேசியதாவது “எல்லா கோட்டையும் அழி முதலில் இருந்து ஆரம்பிப்போம், என்பதைப் போலத்தான் பள்ளி வாழ்க்கையை கதைக்களமாக கொண்ட படத்தில் நடிப்பதாகும். படக்குழுவிலிருந்து தொடர்பு கொண்டு இது மாதிரியான கதை என்று சொன்னதும் முதலில் யோசித்தேன், பிறகு கதையின் பேண்டஸி எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நிஜ வாழ்க்கையில் நடக்க முடியாத ஒரு விசயம் தான், அதை படமாக்குற கான்செப்ட் என்னை ஈர்த்தது, அது தான் நடிக்க உத்வேகமாக இருந்தது”.

“யாருமே முதலில் நம்பாமலும், பிடிக்காமலும் தான் படத்தில் இணைந்தார்கள், படப்பிடிப்பு நடக்க நடக்க ரொம்ப ஜாலியாக மாறிப்போனது. தெலுங்கிலும் இந்த படத்தை எடுக்கும் போது தெலுங்கு பேசிடலாம்னு சாதாரணமா நினைச்சுட்டேன். பேசும் போது தான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, ஆனாலும் தெலுங்கு தெரிஞ்ச நிறையா பேரு இருந்ததால அவங்க சொல்லி கொடுத்தாங்க, ஒரு வழியாக சமாளிச்சு நடிச்சாச்சு” என்றார்.