Advertisment

“நண்பர்கள் தான் எனக்கு எல்லாமே” - கேபிஒய் தீனா!

 Marakuma Nenjam - Kpy Dheena  - Interview

Advertisment

திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘மறக்குமா நெஞ்சம்’ திரைப்படக் குழுவினரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். கலகலப்பான பேட்டியில் நம்மிடையே பல்வேறு சுவாரசியமான விசயங்களை பகிர்ந்து கொண்டனர்.

படத்தில் நடித்த கேபிஒய் தீனா பேசியதாவது “நான் ஸ்கிரிப்ட் கேட்டுக்கவே இல்லை. இது ரக்‌ஷன் அண்ணா படம். அதில் நானிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அவ்வளவு தான். கதை கேட்ட பிறகு ஸ்கூல் சப்ஜெக்ட், நம்ம ஸ்கூலுக்கு திரும்பி போனது மாதிரியான உணர்வை தரும் என்பது மட்டும் உறுதியாக இருந்தது. எனக்கு எல்லாமே என் பிரண்ட்ஸ் தான், பள்ளி முதல் கல்லூரி வாழ்க்கை வரை கிடைத்த நண்பர்கள் தான் என்னை இங்க வரை கொண்டு வந்தவங்க, அந்த நினைவுகளை இது போன்ற படங்களில் நடிப்பதால் மீட்டெடுத்துக் கொள்ளலாம் என்று ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தில் நடித்தேன்”.

“இந்தப் படத்தில் நடித்த ப்ராங்க்ஸ்டர் ராகுல் கதையை கேட்டுக் கொள்வார், படப்பிடிப்பின் போது அவரே ஒன்றைச் செய்வார், அதுக்கு கவுண்டர் கொடுத்தோம்னா அது வேறொன்றாக மாறி வரும். இப்படித்தான் படப்பிடிப்பு தளத்தில் ஒருத்தரை ஒருத்தர் கலாய்ச்சுட்டு ஜாலியா இருப்போம். இயக்குநர் யோகேந்திரன் பல சமயங்களில் ஒரு கதாபாத்திரத்தை எக்ஸ்ப்ளைன் பண்ற விதம் நல்லா இருக்கும். ஆனால் அதிலிருந்து நாங்க ஒரு வெர்சன் எடுத்து நடித்து முடிப்போம்” என்றார்.

interview N Studio
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe