Advertisment

உருவாகும் மரகத நாணயம் 2

Maragadha Naanayam 2

Advertisment

ஏஆர்கே சரவன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் 'மரகத நாணயம்'. ஃபேண்டஸி காமெடி படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. டில்லிபாபு தயாரித்திருந்த இப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற 'நீ கவிதைகளா...' பாடல் இளைஞர்கள் மத்தியில் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகப் படத்தின் இயக்குநர் சரவன் தெரிவித்துள்ளார். படத்தை, முதல் பாகத்தைத்தயாரித்த டில்லிபாபுவே அவரது ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். விரைவில் ஹீரோ, ஹீரோயின் மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

nikki galrani Actor aadhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe