Skip to main content

உருவாகும் மரகத நாணயம் 2

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

Maragadha Naanayam 2

 

ஏஆர்கே சரவன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் 'மரகத நாணயம்'. ஃபேண்டஸி காமெடி படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. டில்லிபாபு தயாரித்திருந்த இப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற 'நீ கவிதைகளா...' பாடல் இளைஞர்கள் மத்தியில் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகப் படத்தின் இயக்குநர் சரவன் தெரிவித்துள்ளார். படத்தை, முதல் பாகத்தைத் தயாரித்த டில்லிபாபுவே அவரது ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். விரைவில் ஹீரோ, ஹீரோயின் மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.    

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் டூ ஒலி - மீண்டும் வித்தியாசம் காட்டும் வெற்றிக் கூட்டணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Aadhi and Arivazhagan Sabdham movie teaser released

இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி இருவரும் ஈரம் பட வெற்றிக்கு பிறகு இணைந்துள்ள படம் சப்தம். 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி வெளியானது. 

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. வசனங்கள் ஏதும் இடம் பெறாத இந்த டீசரில் திகில் படங்களுக்கு உண்டான அம்சங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. மேலும் ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து படத்தில் வித்தியாசம் காட்டியது போல் இப்படத்தில் ஒலியை வைத்து முயற்சி செய்துள்ளனர் படக்குழு. 

ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ஈரம் படம் இதே ஜானரில் வெளியாகி பலரது பாராட்டை பெற்றது. இதையடுத்து மீண்டும் ஒரு திகில் படத்திற்காக வித்தியாசமான கதைக்களத்தின் பிண்ணனியில் இணைந்துள்ள இக்கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த டீசர் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

"உண்மையில் அந்த பழக்கமே எனக்கு இல்லை" - ஹன்சிகா

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

hansika about Partner movie

 

ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடித்து அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கியிருக்கும் படம் பாட்னர். இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கோலி சூரியபிரகாஷ் தயாரித்திருக்கிறார்.

 

இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இம்மாதம் இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு குறிப்பிட்ட நிலையில் விரைவில் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இப்படம் குறித்து ஹன்சிகா பேசுகையில், "திரைத்துறையில் 20 ஆண்டுகளைக் கடந்துள்ளேன். சினிமாவை தாண்டி 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதால் அவர்களுக்கான கல்வி விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் மது சம்பந்தமான காட்சிகள் ஹிட்டாகி ட்ரெண்டானது. அது போன்ற காட்சிகள் இப்படத்திலும் இருக்கிறது. ஆனால், உண்மையில் எனக்கு குடிப்பழக்கமே கிடையாது. ஒரு ஆண் பெண் ்உருவத்திற்கு மாறினால் எப்படி இருக்கும் என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்தது சவாலாக இருந்தது. கதாபாத்திரம் பிடித்துவிட்டதால் நடித்தேன். ரசிகர்களுக்கு இப்படம் கண்டிப்பாக பிடிக்கும்" என்றார்.