2015-ஆம் ஆண்டு, மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'சார்லீ'. துல்கர் சல்மான் மற்றும் பார்வதி மேனன் நடித்த இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கியிருந்தார். இதன் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றுவதற்குக் கடும்போட்டி நிலவியது. இறுதியில், பிரமோத் ஃபிலிம்ஸ் நிறுவனம் இவ்வுரிமையைக் கைப்பற்றியது.
தமிழில் 'மாறா' எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில், மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க, திலீப் குமார் இயக்கினார். ஜிப்ரான் இசையமைத்தார். கரோனா நெருக்கடி காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், படத்தை நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிட, தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. அமேசான் ப்ரைம் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வரும் ஜனவரி மாதம் 8-ஆம் தேதிபடம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், சிறு முன்னோட்டமாக வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/Lv5KUKKwQEw.jpg?itok=sUgzP87a","video_url":"