/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/113_5.jpg)
நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'பத்து தல'. இப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகவுள்ளது.
இந்நிலையில், 'பத்து தல' படத்தில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் நடிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இப்படத்தின் பெயரை தமிழ் சினிமாவின் பிரபல 10 இயக்குனர்கள் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். சிம்பு நடித்து வரும் ‘மாநாடு’ படத்தின் பணிகள் நிறைவடைந்ததும், 'பத்து தல' படத்தின்படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)