Advertisment

“நாம் தரமற்ற ரசாயன உணவுகளைத் தான் உண்கிறோம்” - மன்சூர் அலிகான் வேதனை

mansoor alikhan talk about unhygienic food

தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார்.

Advertisment

சமீபகாலமாக நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வந்த மீனாவின் கணவர் வித்யாசாகருக்குசில வாரங்களுக்கு முன்பு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்ததாக கூறப்படுகிறது.ஆனால், பொருந்தக்கூடிய நுரையீரல் கிடைக்காததால் அறுவை சிகிச்சை நடைபெறாமல் இருந்து நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார். இவரின்உடலுக்கு ரஜினி உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில்வித்யாசாகரின்உடலுக்கு நடிகர் மன்சூர் அலிகான் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்,“குறைந்த வயதில் நுரையீரல் தொற்றால் மரணமடைந்துள்ள மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த இறப்புக்காக மட்டுமல்ல பொதுவாக நாம் உணவு பழக்கவழக்கங்கள்குறித்து கவனிக்க வேண்டும். விதையில்லா காய்கறிகள், விஷம் ஏற்றப்பட்ட காய்கறிகள், பாஸ்ட்புட் உள்ளிட்டவைகளை தான்நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இதனால்சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சிங்கப்பூர், மலேசியாபோன்ற நாடுகளில் மக்களுக்கு கலப்படம் இல்லாத உணவுகள் கிடைக்கிறது. ஆனால் இந்த பட்டியலிலிருந்துதமிழ்நாடுதூரமாக பயணித்து விட்டது. எனவே தரமற்ற உணவுகளைஒழித்து, தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும்”என்றார்.

Tamil Nadu Actor Rajinikanth meena Mansoor Ali Khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe