நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய், கடந்த 27ஆம் தேதி கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூச்சுத்திணறியும் மயக்கமடைந்தும் 41 நபர்கள் இறந்துள்ளனர். இந்த துயர சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பாக அரசு தரப்பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் இந்த சமப்வம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், “என்னோட சொந்த ஊர் கரூர். அந்த சம்பவத்தால என்னால தூங்க முடியல. நம்ம நாட்டுல இப்படிலாம் நடக்குறத் நினைச்சு ரொம்ப அவமானமா இருக்கு. விஜய்யின் வளர்ச்சி பிடிக்காம இப்படி அரசியல் பன்றாங்க. அவர எதிர்க்கனும்னா கொள்கை ரீதியா எதிர்க்கனும். அதைவிட்டுட்டு சொந்த மக்களை காவுகொடுத்துட்டு நல்ல வேஷம் போட்டுகிட்டு இருக்காங்க.
ஒரு மாநாடு நடத்த 28 கண்டிஷன் போடுறாங்க. எந்த கட்சிக்காவது இப்படி போட்டுக்காங்களா. அதே மாதிரி மக்கள் தொகைக்கு ஏத்தாப்ல போலீஸ் அஙக் நிக்கனும்பல. ஏன் நிக்கல? நான் அந்த இடத்துல இருந்திருந்தா நடந்திருப்பதே வேற. நாலு லட்சம் பேரு கூடுறான்னு தெரியுதுல்ல.. அப்புறம் ஏன் முட்டு சந்துக்குள்ள அனுப்புறீங்க. இதுக்கான தண்டனை இன்னும் ஆறு மாசத்துல கிடைக்கும். என்னுடைய ஆதரவு விஜய்க்குதான்” என்றார். பின்பு அவரிடம் விஜய்யை கைது பண்ணுவதாக வெளியான தகவல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய் மீது கை வச்சு பார்... வச்சால் தமிழ்நாடு என்ன ஆகும். பன்றவன விட்டுட்டு ஏன் விஜய்யை கைது பன்ன பாக்குறீங்க” என்றார்.